ஈரான் சின்னாபின்னமாகும்... காரணங்களை அடுக்கும் பட்டத்து இளவரசர்: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் நாடு அடுத்த சில மாதங்களில் கவிழும் எனவும் மேற்கத்திய நாடுகள் இதில் தலையிட வேண்டாம் எனவும் பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் மற்றும் தற்போதைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் 1979 ஆம் ஆண்டு தமது தந்தையின் ஆட்சியை கவிழ்க்க நடந்த புரட்சியை நினைவு படுத்துவதாகவும் ரேசா பஹ்லவி குறிப்பிட்டுள்ளார்.

முடிவுப்பகுதியை நெருங்க அதிக காலம் தேவைப்படாது என குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் எண்ண ஓட்டம் அதுவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களில் அல்லது சில மாதங்களுக்குள் ஈரானின் தற்போதை கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள ரேசா பஹ்லவி,

கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக ஈரானிய மக்கள் அந்த வாய்ப்பை உணர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

59 வயதான ஈரானின் பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

ஈரானிய அரசுக்கு எதிராக போராடும் மக்களிடையே அச்ச உணர்வு சிறிதும் இல்லை எனவும்,

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி ஈரான் தொடர்பில் டிரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ரேசா பஹ்லவி,

ஈரானை தனிமைப்படுத்த டிரம்ப் அரசாங்கத்தால் முடிந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானில் தற்போது நடந்தேறும் ஆட்சியானது சீர்திருத்துவதை விட அகற்றப்படுவதே மேல் என்பதை எனது தோழர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனவும் ரேசா பஹ்லவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ரேசா பஹ்லவி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்