அமெரிக்க துருப்புகள் வெளியேற வாக்களித்த ஈராக் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! ஈரானுக்கு பின்னடைவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்கா ஈராக்குடன் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தொடங்கியுள்ளது.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியதால் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் இரண்டு வாரங்கள் நிறுத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் புகன்கிழமை தொடங்கப்பட்டது.

இது பலரும் எதிர்பார்க்காத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில், ஈரான் படை தளபதி குவாசிமை அமெரிக்கா கொன்ற நிலையில் கடந்த 5ஆம் திகதி அமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற ஈராக் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்கா ஈராக்குடன் கூட்டு இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமா அல்லது தொடங்காதா என்ற பெரிய கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நிலையில் மீண்டு கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இது ஈரானுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் ஈராக்கில் இருந்து முழுமையான பின்வாங்கலை பலமுறை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்