வானுயர வெடித்து சிதறிய எரிமலைக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் ராட்சத எரிமலை வெடிப்பின் போது ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ள சுவாரஷ்ய சம்பவம் நடந்துள்ளது.

செவ்வாயன்று தலைநகர் மணிலாவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத பிலிப்பைன்ஸின் லூசன் தீவில், வானுயர எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

இதில் 800 மீட்டர் உயரத்திற்கு சிவப்பு நிறத்திலான சூடான நீரூற்றுக்கள் எழுந்தன. இந்த வெடிப்பானது 16கிமீ தூரத்தில் ஏற்பட்டிருந்தாலும் கூட, சினோ வாஃப்ளோர் மற்றும் கேட் பாடிஸ்டா என்கிற காதல் ஜோடி வெடிப்பிற்கு முன் நின்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இதனை திருமண புகைப்படக் கலைஞர் ராண்டால்ஃப் இவான் படம்பிடித்துள்ளார். இணையத்தில் வெளியான இந்த புகைப்படத்தை பார்த்து, "அழகான பேரழிவு" என பொதுமக்கள் வர்ணிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்