மெக்சிகோ வீதிகளில் வெட்டி வீசப்பட்டிருந்த மனித தலைகள்: அதிர வைக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் பிரபல சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள வீதிகளில் இருந்து மனித தலைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சுற்றுலா தளமான கான்கனில் உள்ள பெனிட்டோ ஜுவரெஸ் நகரின் கைவிடப்பட்ட பகுதியில், 22 வயது பெண் ஒருவர் வேலைக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஒரு பேனரில் எழுதப்பட்ட செய்தியுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் தலைகள் வீசியெறியப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த பேனரில், வடக்குப் பகுதியில் உள்ள பொது வழக்குகளின் துணை வழக்கறிஞர் ஜூலியோ சீசர் மோரேனோ ஓரெண்டெய்ன், நீதித்துறை மாநில ஆலோசகரான அன்டோனியோ வில்லலோபோஸ் கரில்லோ மற்றும் பொது பாதுகாப்பு துணை செயலாளர் நெஸ்குவர் இக்னாசியோ விசென்சியோ மென்டெஸ் ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன.

செய்தியில் கையெழுத்திட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடயவியல் ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சிக்க தலைகளை எடுத்து சென்றுள்ளனர்.

அவர்களின் அடையாளங்கள் தெரிவிக்கப்படவில்லை மற்றும் அவர்களின் உடல்கள் எங்கே என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Golfo Cartel, Jalisco New Generation Cartel மற்றும் Los Rojos Cartel ஆகிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் அப்பகுதியில் வேலை செய்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு மெக்ஸிகன் மாநிலமான குயின்டனா ரூவில் உள்ள கான்கன் முனிசிபல் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்