ஈரானுக்கு கூட்டாக பதிலடி கொடுத்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி..! அமெரிக்காவுடன் சேருவது குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி நாடுகள், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரச்சனை தீர்க்கும் வழிமுறையைத் செயல்படுத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், ஈரானுக்குகு அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவுடன் சேரவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை எங்களுக்கு வேறு வழியில்லை.

ஜே.சி.பி.ஓ.ஏ 2015 அணுசக்தி ஒப்பந்தம் கீழ் ஈரான் தனது கடமைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற எங்கள் கவலைகளை இன்று பதிவு செய்துள்ளோம்.

ஜே.சி.பி.ஓ.ஏ ஒப்பந்தத்தின் 36 வது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது படி, இந்த விஷயத்தை பிரச்சனை தீர்க்கும் வழிமுறையின் கீழ் கூட்டு ஆணையத்திடம் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகிறோம், 2018ல் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின், ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தத்தை நடைமுறைப்படுத்தும் பிரச்சாரத்தில் சேர மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழிமுறை மூலம் ஐரோப்பியர்களின் பிரச்சனை ஈரான், சீனா, ரஷ்யா கூட்டு ஆணையத்திற்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பப்படுகிறது.

அந்த கூட்டு ஆணையத்தால் பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால், அது மீண்டும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தால், முந்தைய தடைகள் அனைத்தும் மீண்டும் ஈரானைத் தாக்கக்கூடும், அது இறுதியில் நாட்டையே முடக்கும் என கூறப்படுகிறது.

2018ல் அமெரிக்கா வெளியேறியதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தத்தை சரிவடையாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டதால் அந்நாட்டிற்கு எதிரான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன.

ஆனால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மறுபரிசீலனை செய்தது, ஈரானுக்கு பெரும்பாலான பொருளாதார நன்மைகளை மறுத்துள்ளது.

ஈரான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல வரம்புகளை படிப்படியாக மீறி பதிலடி கொடுத்தது.

இந்த மாதத்தில் ஈரான், தனது யுரேனிய உற்பத்தியில் வரம்புகளை கைவிடுவதாகக் அறிவித்தது, ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஐரோப்பிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்