பொலிசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இளம்பெண்: இன்று அவரது நிலை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பொலிசாருக்கும், தேசிய பாதுகாப்பு படைக்கும், ராணுவத்துக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு இளம்பெண் பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

மெக்சிகோவிலுள்ள La Bocanda என்ற நகரில், María Guadalupe López Esquivel (21) என்ற பெண், பொலிசாருடன் நடந்த மோதலில்

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. Catrina என்று அழைக்கப்படும் இந்த பெண் ஒரு சாதாரண பெண் அல்ல.

மெக்சிகோவின் பயங்கர கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர் அவர்.

அக்டோபரில் 13 பொலிசாரை கொன்று சின்னபின்னமாக்கி 9 பொலிசாரை படுகாயமடையச் செய்த ஒரு தாக்குதலை முன்னின்று நடத்தியவர் இந்த பெண்.

வெள்ளியன்று பாதுகாப்புப் படையினர் மீது அவரது கூட்டத்தினர் தாக்குதல் நடத்தும்போது, பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில் Catrina படுகாயமடைந்ததோடு, அவருடன் இருந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் ஒரு காலத்தில் கையில் துப்பாக்கியுடன் மொடல் அழகி போல் வலம் வந்த Catrina, பரிதாபமாக குண்டடிபட்டு ஓரிடத்தில் அமர்ந்திருப்பதையும், ராணுவ வீரர் ஒருவர் அவரை ஹெலிகொப்டர் ஒன்றிற்கு தூக்கிச் செல்வதையும் காணலாம்.

பின்னர் மருத்துவமனையில் அவரை பரிசோதிக்கும் மருத்துவர் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்வதையும் வீடியோவில் காணமுடிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்