தோண்ட தோண்ட குவியல் குவியலாக கிடக்கும் சடலங்கள்... உறைய வைக்கும் மர்ம புதைகுழி

Report Print Basu in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவின் மேற்கு நகரமான குவாடலஜாராவுக்கு புறநகர் பகுதியில் உள்ள பெரிய புதைகுழியில் இருந்து குறைந்தது 29 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜாலிஸ்கோ மாநிலத்தில் இந்த மோசமான தளம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே பகுதியில் நவம்பர் முதல் மொத்தம் 80 சடலங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களில் நான்கு பேர் ஓரளவு அடையாளம் காணப்பட்டதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுடன் ஒத்துப்போவதாகயதாகவும் உள்ளுர் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கல்லறை மற்றொரு பெரிய புதைகுழியில் இருந்து சுமார் 260 அடி தொலைவில் அமைந்துள்ளது, அங்கு குறைந்தது 50 பேரின் உடல்கள் டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டன. நவம்பரில், 31 சடலங்களும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டன.

நவம்பர் மாதம் அருகிலுள்ள தலாகேபாக் நகராட்சியில் மர்ம கிடங்கை கட்டுப்பாட்டில் எடுத்த தேசிய காவலர்கள், அங்கு கடத்தப்பட்ட 8 பேரை மீட்டு, ஆயுதங்களை பறிமுதல் செய்து 15 பேரை கைது செய்தனர்.

பின்னர், அங்கு நடந்த சோதனையில் இந்த மூன்று கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதற்கு முன்னர், குவாடலஜாரா புறநகரில் செப்டம்பர் 3ம் திகதி 34 சடலங்களுடன் ஒரு பெரிய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொரு இடம் மே மாதத்தில் 30 பேரின் எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜலிஸ்கோவில் ஜனவரி முதல் நவம்பர் வரை கிட்டத்தட்ட 2,500 கொலைகள் பதிவாகியுள்ளன, அங்கு பலம்வாய்ந்த ஜலிஸ்கோ நியூவா ஜெனரேஷன் கார்டெல் அமைந்துள்ளது என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்