ஆறு வயது குழந்தையை சீரழித்து கொன்ற நபர்: உயிருடன் கொளுத்திய கும்பல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் ஆறு வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்ததாக சந்தேகத்திற்குரிய விதத்தில் சிக்கிய ஒருவரை, உயிருடன் கொளுத்தியது ஒரு கும்பல்.

மெக்சிகோவில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் Jarid என்ற ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள்.

மறுநாள் அவளது உயிரற்ற உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் அத்தை Alfredo Roblero என்ற நபர்தான் Jaridஐ கொன்றது என்று கூறி அவரைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கச் சென்றார்.

ஆனால், அதற்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் Robleroவைப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர் Robleroவின் கைகளைக் கட்டி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தது அந்த கும்பல்.

அலறி துடித்து சாகும் Robleroவை வேடிக்கை பார்த்தபடி நின்றது அந்த கும்பல். அதற்குள் பொலிசார் வந்தும் Robleroவைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டத்தை பொதுமக்களே கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்