தாயிடமிருந்து குழந்தையை பறித்து கடத்த முயன்ற மர்ம நபருக்கு நேர்ந்த கதி..! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் பெற்ற தாய் கையில் இருந்து குழந்தையை பறித்து கடத்த முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கலிபோர்னியாவில் ஜனவரி 4ம் திகதி ரிலே பெக்ராம்-நோஹெலி ஜோடி 6 வயது மகள் நெவியா மற்றும் சகோதரர் கிறிஸ் ஆகியோருடன் வெனிஸ் கடற்கரைக்கு அருகில் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது, திடீரென குடும்பத்தினரை அணுகிய 31 வயதான மெக்லாரின்-நெல்சன், குழந்தை நெவியாவை தனக்கு தெரியும் என்றும், அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மோதலை தவிர்க்க நெல்சனிடமிருந்து விலகிச் சென்ற குடும்பத்தினர் அருகில் உள்ள பீட்சா கடைக்கு சென்றுள்ளனர்.

எனினும், அவர்களை பின்தொடர்ந்த நெல்சன், பீட்சா கடைக்குள் சென்று நோஹெலி மாடியில் இருந்த குழந்தையை பறித்து கடத்த முயன்றுள்ளார்.

எனினும், பெக்ராம் மற்றும் கிறிஸ், நெல்சனை கடுமையாக தாக்கி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், நெல்சனை கைது செய்து அவர் மீது கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்