போராட்டகாரர்களை சுட்டு வீழ்த்தியது யார்...? ஈரான் வெளியிட்டு முக்கிய தகவல்! நீடிக்கும் மர்மங்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரான் தலைநகரில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து தெஹ்ரான் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

ஈரானிய தலைநகரில் பொலிசார் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர் என்று தெஹ்ரானின் காவல்துறைத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போராட்டகாரர்கள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சிகள் மற்றும் காயமடைந்தவர்களை மற்ற போராட்டகாரர்கள் சுமந்து செல்லும் படங்கள் ஆகியவை இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், துப்பாக்சிச் சூடு சத்தம் கேட்ட மக்கள் பயத்தில் தெறித்து ஓடிய காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால், குறித்த வீடியோ தற்போது வரை அதிகாரப்பூர்வமானது என உறுதிசெய்யப்படவில்லை.

அதேசமயம், போராட்டத்தில் ஈடுபடும் ஈரானிய மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்விட்டர் மூலம் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினர் சுடவில்லை, ஏனெனில் அதிகாரிகளுக்கு கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெஹ்ரான் காவல்துறைத் தலைவர் ஹொசைன் ரஹிமி கூறினார்.

குறித்த காட்சிகள் உண்மை என்றால் தெஹ்ரான் பொலிசார் சுடவில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்