ஈரானுடன் மோதினால் இது தான் கதி.... உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானுடனான இராணுவ மோதலானது உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்குக்கு வருகை தருவதால், ஈரானிய உயர்மட்ட தளபதி குவாசிமை அமெரிக்கா கொன்றதன் மூலம் அதிகரித்த பதட்டங்கள் தணியும் என்று நம்புவதாக வளைகுடாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன் அபே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குவாசிம் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து போர் வெடிக்கும் என்ற அச்சம் எழுந்தது.

இதனால், ஐப்பான் பிரதம் அபேவின் ஐந்து நாள் வளைகுடா சுற்றுப்பயணம் சந்தேகத்திற்குள்ளானது.

ஆனால், பதட்டங்கள் குறைந்த நிலையில், ஜப்பானிய பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார், ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு அல்-உலா மாகாணத்தில் சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஒரு மணி நேர சந்திப்பின் போது பிராந்திய பதட்டங்கள் குறித்து விவாதித்தார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மசாடோ ஓடகா தெரிவித்துள்ளார்.

ஈரான் போன்ற ஒரு நாட்டை உள்ளடக்கிய பிராந்தியத்தில் எந்தவொரு இராணுவ மோதலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அபே கூறியதாக ஓடகா கூறினார்.

அபே, பதட்டங்களைத் தணிப்பதற்கான தூதரக முயற்சிகளில் ஈடுபட அனைத்து தொடர்புடைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார் என்று ஓடகா மேலும் கூறினார்.

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் நெருக்கமாக பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும், ஜப்பான் உளவுத்துறை நடவடிக்கைகளுக்காக மத்திய கிழக்கிற்கு இரண்டு பி -3 சி ரோந்து விமானங்களுடன் ஒரு போர் கப்பலை அனுப்பவும் முடிவு செய்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் ஜப்பான் சேராது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான சவுதி எண்ணெய் விநியோகத்தின் முக்கியத்துவத்தை அபே வலியுறுத்தினார் என்று ஒட்டாக்கா கூறினார். பிரதமரின் சுற்றுப்பயணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானுக்கான பயணங்களும் அடங்கும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்