ஈரானின் உச்ச தலைவர் மீது கடும் கோபம்... குவாசிம் சுலைமானை உதைக்கும் மக்கள்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரானில் போராட்டம் வெடித்து வரும் நிலையில், குவாசிம் சுலைமானியின் போஸ்டரை போராட்டக்காரர்கள் உதைப்பது போன்றும், உச்ச தலைவர் அலி கோமெய்னி போஸ்டர் மீது கார்கள் ஏற்றுவது போன்றும் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வாரம் ஈரானின் புரட்சி தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அவரை கொன்றது. இதனால் அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கில், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஈரான் 80 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தது. இதில் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஈரான் தாக்குதல் நடந்த அதே தினத்தில் தான், உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 176 பேரும் இறந்தனர்.

இந்த விபத்திற்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் குற்றம் சுமத்திய போது, ஈரான் மறுத்தது, அதன் பின் நாங்கள் செய்த மனிதபிழை காரணமாக இந்த விபத்து நடந்துவிட்டதாக தெரிவித்தது.

இதில் ஈரானியர்கள், கனடாவை சேர்ந்தவர்களே அதிகம் இறந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரான் அரசை எதிர்த்து நாட்டில் போராட்டம் வெடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் ஆக்ரோசமாக குவாசிம் சுலைமானியின் போஸ்டர்களை உதைப்பதும், சுவற்றில் ஒட்டியிருந்த அவரின் போஸ்டரை கிழிப்பதும் போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி நாட்டின் உச்சதலைவரான Ali Khamenei-யின் உருவப்படம் சாலையின் கீழே கிடக்கிறது, அதன் மேல் வாகனங்கள் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

மேலும் அங்கு போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருவதால், பொலிசார் கண்ணீர் புகைகுண்டு வீசி, போராட்டங்களை கலைத்தனர். போராட்டத்தின் சாலையில் வரையப்பட்டிருந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கொடியினை அவர்கள் மிதிக்காமல் சென்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்