167 பேரை பலிகொண்ட விமானம் தீப்பிழம்பாக மாறும் காட்சி: வெளியான புதிய வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஈரானில் விழுந்து நொறுங்கி 167 பேரை பலிகொண்ட விமானம் தீப்பிழம்பாக மாறும் காட்சி அடங்கிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கார் ஒன்றில் பயணிக்கும் சிலர் எடுத்துள்ள வீடியோ ஒன்றில், வானிலிருந்து விமானம் விழும் காட்சி பதிவாகி சில புதிய தகவல்களை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.

28 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, அந்த விமானம் விழுவதற்கு முன்னரே 8,000 அடியிலேயே தீப்பற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஆனால், அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அது டெஹ்ரானை நோக்கி திரும்பத் தொடங்கியதாகவும், ஆனால் விமான ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறையை எச்சரிக்கவில்லை என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.

முதலில் ஈரான் அது ஒரு விபத்து என்று தெரிவித்திருந்த நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டிகள் சேதமடைந்துள்ளதோடு, கொஞ்சம் தரவுகளும் அழிந்துள்ளன.

இதற்கிடையில், ரஷ்ய தயாரிப்பான ஏவுகணை ஏதாகிலும் விமானத்தை தாக்கி வீழ்த்தியதா என்பதை ஆராய்வதற்காக உக்ரைன் ஏவுகணை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்