உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: எந்த இடத்தில் பிரித்தானியா, அமெரிக்கா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இந்த ஆண்டு ஜப்பான் முதலிடத்தை எட்டியுள்ளது.

உலகின் அதிக செல்வாக்கு மிகுந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் தற்போது புதிய தசாப்தத்தின் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஜப்பான், 191 நாடுகளுக்கு விசா இல்லாத அல்லது, நேரடியாக விசா பெறும் வாய்ப்பை வழங்கி வருகிறது.

இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் 190 நாடுகளுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜேர்மனி 189 நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

ஆசியாவின் இரு நாடுகள் முதல் இரண்டு இடங்களை தட்டிச் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பின்லாந்து மற்றும் இத்தாலி 4 வது இடத்திலும், ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஐந்தாவது இடத்திலும், சுவீடன் மற்றும் பிரான்ஸ் 6 வது இடத்திலும் உள்ளன.

வல்லரசு நாடுகளான பிரித்தானியா மற்றும் அமெரிக்கா கடும் சரிவை சந்தித்துள்ளன. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து 8-வது இடத்தில் உள்ளன.

The best passports to hold in 2020 are:

1. Japan (191 destinations)

2. Singapore (190)

3. South Korea, Germany (189)

4. Italy, Finland (188)

5. Spain, Luxembourg, Denmark (187)

6. Sweden, France (186)

7. Switzerland, Portugal, Netherlands, Ireland, Austria (185)

8. United States, United Kingdom, Norway, Greece, Belgium (184)

9. New Zealand, Malta, Czech Republic, Canada, Australia (183)

10. Slovakia, Lithuania, Hungary (181)

The worst passports to hold

  • North Korea, Sudan (39 destinations)
  • Nepal, Palestinian Territory (38)
  • Libya (37)
  • Yemen (33)
  • Somalia, Pakistan (32)
  • Syria (29)
  • Iraq (28)
  • Afghanistan (26)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்