உக்ரேன் விமான விபத்து... கருப்பு பெட்டியை ஒப்படைக்க மறுக்கும் ஈரான்: வலுக்கும் சந்தேகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் 176 பேரை பலிகொண்ட உக்ரேன் விமான விபத்தில், மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஈரான் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரித்தானியர்கள், கனேடியர்கள் உள்ளிட்ட 176 பேரை பலிகொண்ட விமான விபத்தில், மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை உரிய நிர்வாகத்திடம் கையளிக்க ஈரான் மறுத்துள்ளது.

குறித்த கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள தரவுகள், அந்த விமானம் விபத்துக்குள்ளானதன் உண்மை தகவலை உலகிற்கு வெளிப்படுத்தும் என நம்பப்பட்டது.

மட்டுமின்றி, ஈராக்கில் அமைந்துள்ள அல் ஆசாத் தளம் மீது ஈரான் தாக்குதல் தொடுத்த அடுத்த சில நிமிடங்களில் குறித்த பயணிகள் விமானமும் விபத்தில் சிக்கியுள்ளது.

167 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என அனைவரையும் பலிவாங்கிய அந்த விமானத்தின் கருப்பு பெட்டியானது,

அதிகாரிகளின் தீவிர தேடலுக்கு பின்னர் மீட்கப்பட்டது. ஆனால் அந்த கருப்பு பெட்டியை போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்க தெஹ்ரானின் பயணிகள் விமானப் போக்குவரத்துத் தலைவர் அலி அபெட்ஸாதே மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரானில் உள்ள உக்ரேனிய தூதரகம் ஆரம்பத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ஆரம்ப தரவுகளின்படி, தொழில்நுட்ப காரணங்களால் இயந்திரம் செயலிழந்ததாகவும் இதனால் விமானம் விபத்துக்குள்ளானது.

தற்போதைய நிலவரப்படி, பயங்கரவாத தாக்குதல் அல்லது ஏவுகணைத் தாக்குதலின் காரணங்களை நிராகரிக்கப்படுவதற்கு இல்லை என குறிப்பிட்டார்.

ஆனால் அடுத்த சில மணித்துளிகளில் அந்த பதிவானது ரகசியமாக நீக்கப்பட்டது. மட்டுமின்றி, வெளியான தகவல் அனைத்தும் உத்தியோகப்பூர்வமற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பான காணொளி ஒன்றில், விமானம் கீழே விழும்போதே நெருப்பு கோளமாகவே இருந்துள்ளது.

உக்ரேன் பிரதமரிடம், ஏவுகணை தாக்குதல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஊகாபோகங்களுக்கு பதிலளிக்க முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்