நடுவானில் உக்ரைன் விமானத்தில் என்ன நடந்தது.. எப்படி வெடித்து சிதறியது? முக்கிய தகவல்களை வெளியிட்டது ஈரான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானில் நேற்று உக்ரேனிய ஜெட்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அந்நாட்டு புலனாய்வாளர்கள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று அமெரிக்கா-ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் சற்று நேரத்தில் தரையில் விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 176 பேரும் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஈரான் புலானய்வாளர்கள், விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டது விமானிக்கு முன்னரே தெரிந்துள்ளது.

எனினும், விமானக் குழு உறுப்பினர்கள் ஒருபோதும் உதவிக்காக அழைப்பு விடுக்கவில்லை. விமானி தகவல் ஏதும் தெரிவிக்காமல் விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்ப முயற்சித்துள்ளார்.

இதன் போதே விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்தனர்.

மேலும், விமானம் தரையில் மோதியவுடன் வெடித்து சிதறியதாக கூறிய புலனாய்வாளர்கள், உக்ரைனின் கெய்வ் வரை பயணிக்க விமானம் முழுமையாக எரிபொருளை ஏற்றியிருந்ததே வெடித்து சிதறியதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

விமானத்தில் இருந்து தரவு மற்றும் விமான ஓட்டி அறை தகவல்தொடர்புகளைக் கொண்ட "கருப்பு பெட்டிகள்" என்று இரண்டும் மீட்கப்பட்டுள்ளன, அவை சேதமடைந்தால் சில தரவுகளை இழந்துவிட்டன என்பதையும் ஈரானிய புலானய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்