176 பேரின் உயிரை பறித்த விமானம் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டதா? அதிர்ச்சியளிக்கும் ஆதார புகைப்படங்கள் கசிந்தது!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரானில் 176 பயணிகளை பலி கொண்ட விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிய நிலையில் அது ராக்கெட் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக கூறும் ஆதார புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் Tehran உள்ள Imam Khomeini International விமான நிலையத்தில் இருந்து Boeing 737 ரக உக்ரைன் விமானம் ஒன்று 176 பயணிகளுடன் நேற்று கிளம்பியது.

கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விமான விபத்துக்கு காரணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் என ஈரான் கூறியது.

ஆனால் ஈரான் - அமெரிக்க பிரச்சனை தீவிரமாக உள்ள நிலையில் விமான விபத்து சதி வேலையாக இருக்குமோ என பலரும் சமூகவலைதளத்தில் சந்தேகத்தை கிளப்பினர்.

இந்த சூழலில் விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுமா என்பதை கூற Tehran அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஈரானை சேர்ந்த தன்னார்வலர் Ashkan Monfared என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ராக்கெட் ஏவுகணை புகைப்படத்தை வெளியிட்டுள்ள Ashkan விமான விபத்து நடந்த பகுதியில் இது கண்டுடெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது போன்ற பொருள் விமானத்தின் பாகமாக வருமா? இது ராக்கெட் தானே என கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்னொரு பதிவில் அந்த ஏவுகணை ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த ராக்கெட் ஏவுகணை மூலம் தான் 176 பயணிகள் பயணித்த விமானம் தகர்க்கப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் சமூகவலைதளங்களில் பெரிய விவாதம் நடந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்