இராணுவ தளத்தின் மீதான தாக்குதலில் கணவனை இழந்த இளம் மனைவி! சடலத்தை வாங்க சென்றேன் என கண்ணீர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கென்யாவில் அமெரிக்க இராணுவ தளம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது அதில் அமெரிக்கர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி கண்ணீருடன் பேசியுள்ளார்.

கென்யாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது al-Qaida-aligned தீவிரவாத இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவரான Dustin Harrison விமானியாகவும் இருந்தவர் ஆவார்.

Dustin உயிரிழந்தது அவர் மனைவி Hope-ஐ மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து Hope கூறுகையில், அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் போது என் கணவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி எனக்கு முதலில் போனில் சொல்லப்பட்டது, அதை கேட்டு நான் துடித்து போனேன்.

என் கணவர் உடலை அடையாளம் காட்டவும், அதை பெற்று கொள்ளவும் என்னை விமானத்தில் அழைத்து சென்றனர், என்னுடன் குழந்தையையும் அழைத்து சென்றேன்.

இந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, Dustin எப்போதும் என்னுடைய ஹீரோ தான் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்