ஈராக்கிற்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் - சவுதி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துணை மந்திரி புதன்கிழமை இராச்சியமும் அதன் தலைமையும் ஈராக்கோடு நிற்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும் போர் மற்றும் வெளிப்புறக் நாடுகளிடையேயான மோதலின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் எனக்கூறியுள்ளார்.

இளவரசர் காலித் பின் சல்மான் ஒரு ட்வீட்டில் கூறியதாவது: “இராச்சியமும் அதன் தலைமையும் எப்போதுமே சகோதர ஈராக்கோடு நிற்கின்றன. வெளிப்புறக் நாடுகளிடையேயான போர் மற்றும் மோதல்களின் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அதன் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

மேலும் கடந்த காலத்தில் தாங்கிக்கொண்ட வலிகளை கடந்து அதன் பெருந்தன்மையள்ள மக்கள் செழிப்புடன் வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்