தெற்காசியாவில் புத்தாண்டு தினத்தில் அதிக குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியல்! இலங்கைக்கு எந்த இடம் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

2020 புத்தாண்டில் தெற்காசிய நாடுகளில் 97000க்கும் அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் (UNICEF) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு தினமான கடந்த 1ஆம் திகதி உலகளவில் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில் தெற்காசியாவில் 97000 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில் இதில் இந்தியாவில் மட்டும் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளன.

அதற்கடுத்து பாகிஸ்தானில் 16,787 குழந்தைகள் பிறந்துள்ளது.

இப்பட்டியலில் வங்கதேசம் மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு 8093 குழந்தைகள் பிறந்துள்ளன.

நான்காம் இடத்தில் உள்ள நேபாளத்தில் 1567 குழந்தைகளும், ஐந்தாம் இடத்தில் உள்ள இலங்கையில் 882 குழந்தைகளும் பிறந்துள்ளது.

இதற்கடுத்த இடங்களில் பூட்டான் (36) மற்றும் மாலத்தீவு (18) ஆகிய நாடுகள் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...