காதலியை நரபலி கொடுத்து.. இறைச்சியை சமைத்து தாய்க்கு விருந்தளித்த கொடூரன்: பத பதைக்க வைக்கும் காரணம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்பரிக்கா நாடான நைஜீரியாவில், குடும்பத்தை வளமாக்குவதற்காக, இளைஞர் ஒருவர் பாதிரியார் உதவியுடன், தனது காதலியை கொடூரமாக கொன்று, இறைச்சியை சமைத்து தாய்க்கு விருந்தளித்த சம்பவம் பதபதைக்க வைத்துள்ளது.

48 வயதான போலா அடீகோவின் மகன் 23 வயதான ஓவொலாபி, 22 வயதான டேலி-ஒலடெலி என்ற மாணவியை கவர்ந்து ஹோட்டலுக்கு அழைத்து சென்று, போதைக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்ததாக பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

பின்னர், 42 வயதான பிலிப் என்ற பாதிரியார், சுயமாக நடத்தும் தேவாலயத்திற்கு மாணவியின் உடலை கொண்டு சென்றுள்ளார்.

அங்கு ஒலடெலியின் தலையை ஒவொலாபி நொறுக்கிய பின், பிலிப் ஆட்டை அறுப்பது போல் மாணிவியன் தொண்டை அறுத்துள்ளார்.

பின்னர், மாணவியின் உடலை துண்டு துண்டாக்கிய பாதிரியார் பிலிப், சடங்கு படி பணக்காரர்களாக ஒலடெலியின் இறைச்சியை சமைத்து சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் படி இறைச்சியை சமைத்த ஒவொலாபி, தனது தாய் போலா அடீகோவிற்கு விருந்தளிக்க அவரும் அதை சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தான் சாப்பிட்டது ஒலடெலியின் இறைச்சி என தனக்கு தெரியாது என அடீகோ கூறியுள்ளார்.

மேலும். பாதிரியார் பிலிப் மற்றும் மகன் ஒவொலா, சடங்கில் ஆட்டு இறைச்சி சமைக்கப்பட்டதாக கூறி தன்னை சாப்பிட வைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை மாநில குற்றவியல் விசாரணை மற்றும் புலனாய்வுத் துறையின் படுகொலை பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

dailystar

நரபலி கொடுக்கப்பட்ட மாணவி, லாகோஸ் மாநில பல்கழைக்கழகத்தில் சமூகவியல் மாணவராக கடைசி ஆண்டில் படித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் அவர் காணாமல் போனதை அடுத்து அவரது பெற்றோர் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட மாணவியின் தந்தை, தனது மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...