அரை நிர்வாண கோலத்தில் ஆண் ஒருவரை நாயை போன்று இழுத்து சென்ற இளம்பெண்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தெற்காசிய நாடான வங்காளத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அரை நிர்வாண கோலத்தில் ஆண் ஒருவரை நாயை போன்று சங்கிலியால் இளம்பெண் ஒருவர் இழுத்துச் சென்ற சம்பவம் தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்புடைய சம்பவத்தில் உட்பட்ட இருவரும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர் அப்சனா ஷெஜூட்டி. இவரே அதி நவீன ஆடை அலங்காரத்துடன் பொதுமக்களை கண்டுகொள்ளாமல் தெரு வீதி வழியே நடந்து சென்றவர்.

நாய் போன்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு தவழ்ந்து செல்லும் நபர் துத்துல் சவுத்ரி என தெரியவந்துள்ளது.

1968 ஆம் ஆண்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பெண்ணியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சம்பவத்தை அதேபோன்று வங்காளத்தில் மேற்கொண்டதாகவே இந்த விவாதத்திற்கு இருவரும் விளக்கமளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றை பதிவிட்ட நிமிட நேரங்களில் அது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

டாக்கா பல்கலைக்கழகத்தில் கலை தொடர்பில் பயின்று வரும் ஷெஜூட்டி, தலைநகர் டாக்காவிலேயே இந்த நாடகத்தை முன்னெடுத்துள்ளார்.

தற்போது ஷெஜூட்டியின் விளக்கத்தை ஏற்று, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதி அளித்ததை அடுத்து பொலிசார் இருவரையும் விடுவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...