நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்..! 27 பேரை தாக்கிய மர்ம வைரஸ்... கொடிய ‘சார்ஸ்’ நோய் என பீதி!

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவில் மர்மமான வைரஸ் காய்ச்சலால் 20-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தில் 27 பேர் வைரஸ் நிமோனியாவால் பாதிப்புக்குள்ளானது தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ளதாக பெய்ஜிங் சுகாதார அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இன்னும் கண்டறியப்படாத மர்ம காய்ச்சல், 2003ல் நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்ற கடுமையான ‘சார்ஸ்’ நோயாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனினும், சார்ஸ் நோய் என்பதை ‘உறுதிப்படுத்தவில்லை ’ என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காய்ச்சல் பரவுவதற்கு மத்தியில் உள்ளுர் மருத்துவமனைகளில் வுஹான் சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் வுஹான் நகரத்திற்கு புலனாய்வாளர்கள் குழுவை அனுப்பியுள்ளனர்.

புலனாய்வு குழு ‘தொடர்புடைய ஆய்வு மற்றும் சரிபார்ப்பு பணிகளை நடத்துகிறது’ என அரசு நடத்தும் ஊடகங்கள் பொதுமக்களுக்கு உறுதியளித்தன

அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியாக கண்டறிய முடியாத நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை ஒப்புக்கொண்டது.

இதுவரை 27 பேர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேரின் நிலைமை மோசமாக உள்ளது, 18 பேர் நிலையாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நிலையாக இருந்து இரண்டு பேர் விடு திரும்ப உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

கடல் உணவு சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், புலனாய்வாளர்கள் குறித்த தளத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த நோய் வைரஸ் நிமோனியாவின் பாதிப்பு என்று ஆய்வக சோதனைகள் கூறியுள்ளன. எனினும், காய்ச்சல் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதில்லை என்று புலனாய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...