ஈராக்கில் பரபரப்பு! அமெரிக்கா தூதரகத்திற்கு தீ வைத்து கொளுத்தி போராட்டகாரர்கள் வெறியாட்டம்: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தை, போராட்டகாரர்கள் தீ வைத்து கெளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் அமெரிக்கர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை ஈராக் மற்றும் சிரியாவில் ‘கட்டேப் ஹெஸ்பொல்லா’ போராளிக்குழுவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இத்தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய 25 போராளிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலால் கொந்தளித்த ஈராக் ஷியா போராளிகள் குழுவின் ஆதரவாளரகள் நூற்றுக்கணக்கானோர், பாக்தாதில் உள்ள அமெரிக்கா தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தை கலைக்க தூதரக வளாகத்திற்குள் இருந்த அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

இதனையடுத்து, அமெரிக்க தூதரகத்தைச் சுற்றியுள்ள சுவரில் இருந்த பாதுகாப்பு கமெராக்களை போராட்டகாரர்கள் கற்களை வீசி அடித்து நொறுக்கினர்.

மேலும், தூதரக வளாகத்தை சுற்றிய உள்ள சுவர்களை தீ வைத்து கொளுத்தினர். அமெரிக்க தூதரக வாயில் கதவை உடைத்து வளாகத்திற்குள் நுழைந்த போராட்டகாரர்கள், கட்டிடத்திற்குள் படையெடுக்க முயன்று வருகின்றனர்.

மேலும், கட்டேப் ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு ஆதரவாக தூதரக சுவர் மற்றும் ஜன்னல்களில் சிவப்பு நிறத்தில் கிராஃபிட்டியை தெளித்தனர்.

அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஈராக்கிற்கான அமெரிக்க தூதர் மற்றும் பிற ஊழியர்கள் பாக்தாத்தை விட்டு பாதுகாப்பு தெரியாத இடத்திற்கு விட்டுச் சென்றதாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்