நித்தியானந்தாவுக்கு எத்தனை இடங்களில் சொத்து உள்ளது? அதை திருடிவிட்டதாக வெளிநாட்டிலிருந்து குமுறல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தியாவில் தனக்கு சொந்தமாக 1200 இடங்களில் சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ள நித்தியானந்தா தீயசக்திகளை அதை திருடிவிட்டதாக பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சாமியார் நித்தியாந்தா மீது பாலியல் புகார், ஆள் கடத்தல் மோசடி உள்ளிட்ட புகார் உள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

நித்தியானந்தா தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அவர் ஈக்வடாரில் தங்கியிருந்தார், இதையடுத்து தற்போது அமெரிக்கா அருகே உள்ள ஒரு தீவில் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் நித்யானந்தாவை இண்டர்போல் உதவியுடன் பிடிக்க பொலிசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதேநேரம் அவர் தன்னை சுற்றி நடப்பவை பற்றி கவலைப்படாமல் தினமும் சத்சங்கம் மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.

அவர் நேற்றிரவு ஆற்றிய உரையில், தீய சக்திகள் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருடி விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். இந்தியா முழுவதும் தனக்கு சொந்தமான 1,200 இடங்களில் உள்ள சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மேட்டூர் அணையில் உள்ள கோவிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...