அறுவை சிகிச்சையின் போது திடீரென தீப்பற்றி எரிந்து உயிரிழந்த நோயாளி.. திடுக்கிட வைக்கும் மருத்துவர்களின் அலட்சியம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ருமேனியாவில் அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் நோயாளி தீப்பற்றி எரிந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புக்கரெஸ்டில் உள்ள ஃப்ளோரியாஸ்கா மருத்துவமனையிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணிற்கு டிசம்பர் 22ம் திகதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு பெண் மீது ஆல்கஹால் சார்ந்த கிருமிநாசினியை அறுவை சிகிச்சையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது பெண் உடலில் மின்சார கத்தியை பயன்படுத்தியுள்ளனர். இது ஆல்கஹால் தொடர்புக்கு கொண்டதால், பெண்ணின் உடல் தீப்பற்றி எரிந்துள்ளது.

40% தீக்காயங்களுக்கு ஆளான பெண், ஒரு வாரம் கழித்து மருத்துவமனையில் இறந்தார்.

பெண்ணின் மரணம் குறித்து பொலிசர் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அறுவை சிகிச்சையின் போது என்ன நடந்தது என்ற விவரங்கள் பற்றி அவர்களிடம் கூறப்படவில்லை எனவும், இது ஒரு விபத்து என்று மட்டுமே தங்களிடம் கூறப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து விசாரிப்பதாக சுகாதார அமைச்சர் விக்டர் கோஸ்டாச் உறுதியளித்துள்ளார்.

இந்த மோசமான சம்பவத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறோம் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நானும் ஒருங்கிணைக்கும் சுகாதார அமைச்சக குழுவும் உண்மையை அறிய எல்லாவற்றையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

துணை அமைச்சர் ஹோராடியு மால்டோவன் கூறியதாவது, மின்சார கத்தி மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகளின் போது ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...