மகனின் அஸ்திக்காக காத்திருந்த பெற்றோர்... போனில் கதறி அழுத திருடன்! உருக்கமான பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்வீடனில் இறந்த மகனின் அஸ்தியை பெட்டி ஒன்றில் பெற்றோர் வைத்திருந்த போது, அது காணமல் போன நிலையில், அந்த திருடனே தற்போது கண்கலங்கிய படி குறித்த பெட்டி குறித்து கூறியதால், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்வீடனை சேர்ந்தவர் Dennis. 19 வயதான இவர் சமீபத்தில் இறந்தார். இதனால் இவரின் பெற்றோர் Kinga மற்றும் Bartek Bebnarz' மகனின் அஸ்தியை ஒரு அழகான பெட்டி ஒன்றில் வைத்து, அதை கரைப்பதற்காக காரின் பின்புறத்தில் வைத்துவிட்டு சென்று கொண்டிருந்த போது, ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அஸ்தி இருந்த பெட்டி திருடப்பட்டது.

இதனால் அவர்கள் ஊடங்கள் வழியாக எங்கள் அழகான மகனின் அஸ்தியை காணவில்லை, திருடியவர்கள் தயவு செய்து கொடுத்துவிடுங்கள் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் தங்கள் மகனின் அஸ்தி கிடைத்துவிட்டதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஞாயிற்றுக் கிழமை மாலை போனில் பேசிய நபர் தன் மகனின் அஸ்தி பெட்டி இருக்கும் இடத்தைப் பற்றியும், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீரிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

KINGA BEBNARZ

அஸ்தி இருந்த பெட்டியை திருடிய திருடன், தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்வார் என்று நம்புவதாகவும், அதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து இது குறித்து பெற்றோர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், குறித்த இடத்தில் பெட்டியை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இருப்பினும் மகனின் அஸ்தி மீண்டும் கிடைத்துவிட்டதால், அவர்கள் மகனை இழந்த சோகத்திலும் சற்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...