வெளிநாட்டில் இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! வெறும் 600 திர்ஹாம் மூலம் இன்று லட்சாதிபதியாக மாறினார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மொபைல் ஆப் மூலம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்த நிலையில், இப்போது அவர் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் Fatima Al Mazrouei. இவர் ஒவ்வொரு மாதமும் வறுமையில் வாடும் நான்கு ஏழை குடும்பங்கள் மற்றும் அனாதைகளுக்கு பணம் கொடுத்து உதவி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி ஒருவருக்கு Al Ansari Exchange's Mobile App மூலம் 600 திர்ஹாம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் இவர் இப்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Al Ansari Exchange's Mobile App புரமோசனுக்காக குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வந்தது.

இந்த ஆப் மூலம் பணமோ அல்லது வேறு ஏதேனும் பரிவர்த்தனை செய்பவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

அதன் படி குறித்த ஆப் மூலம் Fatima Al Mazrouei 600 திர்ஹாமை அனுப்ப, அவர் குலுக்கல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து நடந்த குலுக்கலில் அவருக்கு 100,000 திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 4929316 ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த குலுக்கல் போட்டியில் நான் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணம் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும், குறிப்பாக அனாதைகளுக்கும், கல்வி ஆதரவு மற்றும் கவனிப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இது உதவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Fatima Al Mazrouei கடந்த பத்து ஆண்டுகளாக பணபரிவர்த்தனை Al Ansari நிறுவனத்தில் செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இந்த ஆப் பயன்படுத்தி வந்ததன் மூலம் அவருக்கு இப்படி அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்