சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் வெடித்துச் சிதறிய மின்சார டிரான்ஸ்பார்மர்: பதற வைக்கும் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கிய நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சிகள் தற்போது வெளியாக பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தில் பதாதா பகுதியில் மூவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுவரை மொத்த சேதம் தொடர்பில் முழு தகவல் ஏதும் வெளியாகவில்லை.

தற்போது வெளியான மின்சார டிரான்ஸ்பார்மர் வெடிக்கும் காட்சியானது மிந்தானோ தீவில் அமைந்துள்ள Davao பகுதியிலேயே பதிவாகியுள்ளது.

பலத்த சத்தத்துடன் மின்சர டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதுடன் கண்ணைக் கூசும் ஒளிவெட்டவும் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து அங்கிருந்து மறைவிடம் தேடி ஓடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி 2.11 மணியளவில் இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

மேலும், நிலநடுக்கத்தை அடுத்து பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது.

மிந்தானோ வட்டாரத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலஅடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகம் கொண்ட தவாவ் நகருக்கு தெற்கே மையம் கொண்டிருந்தது. எனினும் குறைவான அளவிலேயே சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்