மர்ம குழியில் குமிந்து கிடந்த 50 சடலங்கள்... நாட்டையே உலுக்கி வரும் பிரச்னையில் வெளிச்சத்திற்கு வரும் உண்மை

Report Print Basu in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவில் பெரிய சவக்குழியிலிருந்து குறைந்தது 50 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு நகரமான குவாடலஜாரா புறநகரில் உள்ள பண்ணையிலருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய வன்முறையால் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பு ஜாலிஸ்கோவில் மர்ம இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்த 13 பேரில், 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளவை அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் உள்ளுர் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலியானவர்களை அடையாளம் காணும் பணி மற்றும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தொடர்பான விசாரணை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாடலஜாரா புறநகரில் செப்டம்பர் 3ம் திகதி 34 சடலங்களுடன் ஒரு பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொரு இடம் மே மாதத்தில் 30 பேரின் எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

ஜலிஸ்கோவில் ஜனவரி முதல் நவம்பர் வரை கிட்டத்தட்ட 2,500 கொலைகள் பதிவாகியுள்ளன. அங்கு மோசமான ஜலிஸ்கோ நியூவா தலைமுறை கார்டெல் அமைந்துள்ளது என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்