330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த பேருந்து: குழந்தைகள் உட்பட 14 பேர் பலி.. 18 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, 330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் சிண்ட்பால்சோஜக்கில் உள்ள அரானிகோ நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை, 40 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று 330 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளது.

இந்த பேருந்து டோலகா மாவட்டத்தின் கலிஞ்சோக்கில் இருந்து பக்தாபூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் 11 பெரியவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த 18 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. மாறாக தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிவேகமாகவும், விரைவாகவும் வாகனம் ஓட்டுவதே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்