ஒரே நேரத்தில் தோன்றிய 3 சூரியன்! எந்த நாட்டில் தெரியுமா? ஆச்சரியமுடன் பார்த்த மக்களின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன் தென்பட்டதால், அந்நாட்டு மக்கள் அதை ஆச்சரியமுடன் பார்த்த நிலையில், அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால், தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் மேலும் ஆச்சரியப்பட்டனர்.

இந்த வீடியோவை அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைக் கண்ட வானியல் ஆய்வாளர்கள், சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்.

இது போன்ற நிகழ்வு பனிப்பிரதேசத்தில்தான் தெரியும். இந்த முறை பனிப்பொழிவு குறைந்த ஜின்ஜியாங் மாகாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது அதிசயம் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டும் சீனாவில் உள்ள ஹெய்லாங்சியாங் மாகாணத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. இதனை இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என்று சீன மக்கள் வர்ணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்