சாத்தான் உத்தரவிட்டதாக கூறி வேகமாக நீதிமன்ற அறையிலிருந்து தப்ப முயன்ற குற்றவாளி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தனது சகோதரியை கொலை செய்ய சாத்தான் உத்தரவிட்டதாக கூறி, நீதிமன்றத்தில் இருந்து கொலையாளி தப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் நியூ மாஸ்கோ புறநகர்ப் பகுதியை சேர்ந்த 18 வயதான லியோனிட் கிரேசர், தனது 21 வயது சகோதரி அரியாடா கொரோல் உடன் ஒரே பிளாட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன் அவருடைய பிளாட்டில் இருந்து, பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, அரியாடா உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார்.

அதேசமயம் வேறு ஒரு அறையில், உடலிலும் தலையிலும் ரத்தத்தால் பேய் சின்னங்களை வரைந்துகொண்டு லியோனிட் பிராத்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவனை கைது செய்த பொலிஸார், இன்று ஷெர்பின்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திடீரென அவர், தனது சகோதரியை கொலை செய்ய சாத்தான் உத்தரவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தின் மேல்பகுதியை துளைத்துக்கொண்டு வெளியில் தப்ப முயன்றுள்ளான்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பொலிஸார், விரைந்து சென்று அவனை கீழே இழுக்க முயற்சித்தனர். ஆனால் அவன் தொடர்ந்து தப்ப முயற்சித்ததால் இறுதியில் மின்சார துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பின்னர் வழக்கு விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, இரண்டு மாதம் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கூறி உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers