உணவளிக்க வந்தவரின் கையை கவ்விய சிங்கம்: உறைய வைக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உணவளிக்க வந்த ஊழியரின் கையை சிங்கம் கடித்து குதறியுள்ளது.

கண்ணு பிராடிட்டா என்கிற நபர் பாக்கிஸ்தானில் உள்ள கராச்சி மிருகக்காட்சி சாலையில், விலங்குகளுக்கு உணவளிக்கும் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த திங்கட்கிழமையன்று கூண்டின் அருகே நின்று வெள்ளை சிங்கத்திற்கு இறைச்சியை எறிந்து கொண்டிருந்துள்ளார். அவர் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த சிங்கம் அவரது கையை பலமாக கவ்வியது.

வலிதாங்க முடியாமல் அவர் துடிதுடிக்க, அங்கிருந்த ஒருவர் கூட காப்பாற்ற முன்வராமல் கூச்சலிட்டுக்கொண்டு, செல்போன்களில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.

40 வினாடிகளுக்கு பின்னரே அவர் சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பினார். இதற்கிடையில் விரைந்து வந்த அதிகாரிகள், அவரை வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் அவர் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு மூன்று நாட்களில் அவர் வீடு திரும்பிவிடுவார் எனவும் கூறியுள்ளனர்.

சிங்கங்களுக்கு உணவளிப்பதற்கான மிருகக்காட்சிசாலையின் விதிகளை மீறி, தவறான இடத்திலிருந்து இறைச்சியை எறிந்ததாக மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் கமர் அயூப் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்