தாயை இடித்து தள்ளிய கார்: கோபத்தில் குழந்தை செய்த செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சாலையை கடக்கும்போது ஒரு தாயையும் அவரது மகனையும் கார் ஒன்று இடித்துத்தள்ள, கோபத்தில் அந்த சிறுவன் ரியாக்ட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தில் ஒரு தாயும் மகனும் சாலையைக் கடக்கும் போது, ஒரு கார் அவர்கள் மீது மோத, தாயும் மகனும் கீழே விழுகிறார்கள்.

அப்போது அந்த சிறுவன் ரியாக்ட் செய்யும் விதம் ஆச்சரியமாகவும், மனதைத் தொடும் விதத்திலும் அமைந்துள்ளது.

கீழே விழுந்ததும் சட்டென எழும் அந்த குழந்தை, முதலில் தன் தாய்க்கு ஏதாவது அடிபட்டதா என்று பார்க்கிறான்.

அடுத்து நேராக அந்த காரிடம் சென்று, கோபத்தில் அந்த காரை எட்டி உதைக்கிறான். மீண்டும் தாயை கவனிக்க ஓடும் அவன், தாயை கவனித்து விட்டு காரில் இருந்து இறங்கும் நபரை திட்டுகிறான்.

குழந்தையாக இருந்தாலும், தன் தாய் மீது காட்டும் அக்கறையும், கார் மீது தன் கோபத்தைக் காட்டும் விதமும், மீண்டும் தாயை கவனிக்க ஓடும் பாசமும், கார் ஓட்டியவரை கோபத்துடன் திட்டுவதில் அவர் சாலை விதியை மீறிவிட்டதைக் காட்டும் கோபமும் என ஒரு வளர்ந்த மனிதன் போல அவன் செயல்படுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

பின்னர் கார் ஓட்டியவர் வந்து அந்த தாயையும் மகனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், பொலிசார் தவறு முழுவதும் கார் ஓட்டியவர் மீதுதான் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்