உலக நாடுகளை அச்சுறுத்தும் ரஷ்யாவின் ரகசிய பெட்டி: முதன் முதலாக வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் மொத்த அணு ஆயுதங்களையும் கட்டுப்படுத்தும் ரகசிய பெட்டியின் புகைப்படமானது முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் வெள்ளை பொத்தான்களால் உலக நாடுகளை நொடி நேரத்தில் அச்சுறுத்த முடியும் எனவும் தெரியவந்துள்ளது.

உலக நாடுகள் இரண்டு அணியாக திரண்டு போர் தொடுக்க நேர்ந்தால், ரஷ்யா அந்த பெட்டியை மட்டுமே பயன்படுத்தி எதிரணியினரை கதிகலங்க வைக்க முடியும்.

மட்டுமின்றி, ரஷ்யாவின் அந்த அணுசக்தி பெட்டியால் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் மிக எளிதாக தாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

குறித்த பெட்டியை ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட ஒரு சிலரால் மட்டுமே உரிய ரகசிய எண்ணை பயன்படுத்தி திறக்க முடியும்.

ரஷ்ய ஜனாதிபதி எந்த நாடுகளுக்கு சென்றாலும், குறித்த ரகசிய பெட்டியும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

(Image: Wikipedia)

ரஷ்ய மொழியில் Cheget என அழைக்கப்படும் அந்த பெட்டியானது 1980 காலகட்டத்தில் முதன் முறையாக வடிவமைத்துள்ளனர்.

ஆனால் சமீபத்தில் மட்டுமே புகைப்படங்களையும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் அந்த பெட்டியின் உள் பாகத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதியுடன் அதிகாரி ஒருவர் ஒரு பெட்டியுடன் இருப்பது வாடிக்கையாக நடந்து வந்த சம்பவம் என்றாலும், அது அணுசக்தி பெட்டி என்பது தற்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

(Image: Getty Images/iStockphoto)

இதுபோன்ற 3 பெட்டிகளை ரஷ்யா வடிவமைத்து, பாதுகாத்து வருகிறது. ஒரே ஒரு வெள்ளை பொத்தானால் உலக நாடுகளை சாம்பலாக்கும் இந்த மூன்று பெட்டிகளும், ரஷ்யாவின் மிக முக்கியமான மூன்று உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒன்று ரஷ்ய ஜனாதிபதி புடின், மற்றொன்று பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுடு, மூன்றாவது பெட்டி ரஷ்ய ராணுவ தளபதி வலேரி கெராசிமோவ் வசம் உ:ள்ளது.

குறித்த பெட்டி தொடர்பில் புகைப்படங்கள் வெளிவந்தாலும், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் வெளியிட மறுக்கப்பட்டுள்ளது.

(Image: CEN/@tvzvezda.ru)

இதேபோன்ற பெட்டி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி வசமும் உள்ளது. அதன் எடை மட்டும் 20 கிலோ என கூறப்படுகிறது.

போர் மூளும் அபாயம் ஏற்பட்ட 60 நொடிகளில் அமெரிக்கா தயார் நிலையில் இருக்க இந்தப் பெட்டியில் இருக்கும் ஒற்றை பொத்தான் போதும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி அணுஆயுத போரை முன்னெடுக்க அமெரிக்க ஜனாதிபதியால் முடிவு செய்யப்பட்டால் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறப்படுகிறது.

(Image: AFP/Getty Images)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்