இரத்தவெறி பிடித்த ஓநாய்களிடம் மாட்டிய நாய்... காப்பாற்ற ஓடிய குட்டியும் சிக்கிய கோரம்: உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் வீட்டிற்கு வெளியே கூட்டமாக வந்த ஓநாய்கள் இரண்டு நாய்களை கடித்து குதறி திண்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நினோஸ்கா நகரத்தில் உள்ள வீட்டிற்கு முன்னே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது.

அதில், நாய் வீட்டிற்கு நடந்து செல்லும்போது ஓநாய் கூட்டத்தால் தாக்கப்படுகிறது. அது எதிர்த்து சண்டையிட முயற்சிக்கிறது, ஆனால், ஓநாய்கள் அதை தாக்க முயற்சிகின்றன.

வீடியோவை காண..

இதனிடையே, ஓநாய்களிடம் சிக்கிய நாய்க்கு உதவி செய்ய குட்டி நாய் ஒன்று வந்து அதுவும் ஓநாய்களிடம் சிக்குகிறது.

இறுதியில் இரத்தவெறி பிடித்த ஓநாய்கள், இரண்டு நாய்களையுமே கடித்துக் குதறி கொன்று திண்றுள்ளது.

இந்த வீடியோவை கண்ட பலர், செல்லப்பிராணிகளை வெளியே விட்ட உரிமையாளரை சாடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்