சாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே... தனிநாடு கேட்டு விண்ணப்பித்த நபர் பற்றி தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
524Shares

ஈக்வடார் நாட்டின் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா' என்று பெயரிட்டுள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு முன்பே தனி நாட்டுக்கு விண்ணப்பித்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சுயாஸ் தீக்‌ஷித் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிங்டம் ஆஃப் தீக்‌ஷித் என்ற அவரது தனி நாடடு தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டார்.

எகிப்து - சூடான் நாடுகளுக்கு இடையில் சுதந்திரத்துக்குப் பின் எல்லை பிரிப்பதில் வந்த சிக்கலில், செங்கடலுக்கு அருகில் சுமார் 2100 சதுர கிமீ பரப்பளவை `பிர் டவில்' என்ற பகுதி, இரு நாடுகளும் சொந்தம் கொண்டாட முடியாத Terra Nullius பகுதியாக அறிவிக்கப்பட்டது.

நல்லியஸ் என்றால் ரோமானிய மொழியில் யாருக்கும் சொந்தமில்லை என்று பொருள். சர்வதேச சட்ட விதிகளின்படி, இரு நாடுகளுக்கிடையே சர்ச்சையில் உள்ள சிறிய பரப்பளவு நிலங்களை, தனக்குச் சொந்தம் என்று முதலில் கொடியை நடும் நாட்டுக்கே இந்த டெர்ரா நல்லியஸ் சொந்தம்.

அப்படி சொந்தம் கொண்டாடப்பட்ட பிறகு ஏற்படும் சர்ச்சைகளை மனதில் கருதி இரு நாடுகளும் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள். `பிர் டவில்' பற்றி தகவல் சேகரித்திருந்த சுயாஸ் தீக்‌ஷித், 24 வயதில் வேலை நிமித்தம் எகிப்து சென்றபோது, அங்கு செல்ல திட்டமிடுகிறார்.

அதன்படி, எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன், இரவு நேரத்தில் சாலை வசதி ஏதுமற்ற அந்தப் பாலைவனத்தின் உள்ளே ஜீப்பில் 150 கிமீ பயணிக்கிறார்.

பிறகு, விடிந்ததும் தான் வந்ததன் நினைவாக அந்தப் பாலைவன நிலத்தில் சூரியகாந்தி விதைகள் சிலவற்றை விதைத்து, ஒரு கொடியை நட்டு, சில புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்.

இதனையடுத்து இந்தியாவுக்குத் திரும்பிய சுயாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், பிர் டெவில், இனிமேல் தனக்குச் சொந்தமான தேசம். இனி, இதன் பெயர் `கிங்டம் ஆஃப் திக்‌ஷித், நான்தான் இந்தத் தேசத்தின் அரசன், என் தந்தை ஜனாதிபதி என்று அறிவித்துள்ளார்.

2100 சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலம். சிங்கப்பூர் நாட்டின் பரப்பை போல மூன்று மடங்கு. போட்டி இல்லாமல் இருக்குமா?

ஒரு அமெரிக்கர், இது ஏற்கெனவே நான் கொடி நட்ட நிலம். எனக்குத்தான் சொந்தம் என்று சில புகைப்படங்களைக் காட்டியுள்ளார்.

ரஷ்யர் ஒருவரும் போட்டிக்கு வந்துள்ளார். ஆனால், சுயாஸ் தீக்‌ஷித் இது தொடர்பில் கண்டுகொள்ளவே இல்லை.

ஆளாளுக்கு இப்படி தனிநாடு அந்தஸ்து கேட்டாலும், ஒரு நாட்டுக்கு அங்கீகாரம் அளிக்க என்று ஐ.நா-வில் சில வழிமுறைகள் உள்ளன.

அதைப் பெற இன்னும் முயன்று கொண்டிருக்கும் சுயாஸ் திக்‌ஷித், அந்த அமெரிக்கருடனும் சமாதானமாகச் சென்று யாருக்கு முதலில் அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்தவர் பிர் டவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பரஸ்பரம் உறுதியளித்து இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 வயதான சுயாஸ் தீக்‌ஷித், இந்தூரில் 40 பேரை பணிக்கு அமர்த்தி ஆண்டுக்கு 15 கோடிக்கும் மேலாக வருமானம் ஈட்டித்தந்த ஒரு ஐ.டி நிறுவனத்தை நடத்திவந்தவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்