ஆங்கிலம் பேசியதற்காக பெண்ணைக் கொன்று தலைக்கறி சாப்பிட்ட நபர் கைது!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
278Shares

தன்னிடம் ஆங்கிலத்தில் பேசிய பெண்ணைக் கொன்று அவரது மூளையை அரிசி சாப்பாட்டின் மீது வைத்து சாப்பிட்டுள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர்.

நேற்று Lloyd Bagtong (21) என்பவர் நன்றாக குடித்துவிட்டு, பசியுடன் நின்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது பெண் ஒருவர் அவரிடம் வந்து ஆங்கிலத்தில் ஏதோ கேட்க, அது Bagtongக்கு புரியவில்லை.

ஏற்கனவே பசியில் நின்றுகொண்டிருந்த Bagtongக்கு கோபமும் சேர்ந்துகொள்ள, அந்த பெண்ணை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மறைத்துவைத்திருந்த கத்தியால் அவரைக் கொன்ற Bagtong, அந்த பெண்ணின் தலையை எடுத்து வந்து, சோறு சமைத்து அதன் மீது அந்த மூளையையும் வைத்து சாப்பிட்டிருக்கிறார்.

அவரது மண்டையோட்டையும் ஒரு குழிக்குள் வீசியிருக்கிறார் Bagtong. அரை நிர்வாணமாக, ஒரு ஜீன்ஸ் மட்டும் அணிந்து, மேலாடையின்றி, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார், சந்தேகத்தின் பேரில் Bagtongஐ கைது செய்தனர்.

விசாரணையில், பசியிலும் கோபத்திலும் இருந்த தன்னிடம் வந்து அந்த பெண் ஆங்கிலத்தில் பேசியதால், ஆங்கிலம் புரியாத கோபத்தில் அவரைக் கொன்றுவிட்டதாக தெரிவித்தார் Bagtong.

தலை இல்லாததால் அந்த பெண்ணை அடையாளம் காணுவது பெரும் சவாலாக உள்ள நிலையில், யாராவது காணாமல் போயிருந்தால் அவர்களது உறவினர்கள் தங்களை அணுகுமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்