உலகமே வியந்து பார்க்க வைத்த மூன்று தமிழர்கள்... அதில் இவர் மட்டும் வெற லெவல் டிரண்டிங்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்
426Shares

உலகம் முழுவதிலும் பல்வேறும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சமூகவலைத்தளங்களில் மூன்று தமிழர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் இப்போதும் சமூக ஊடகங்கள் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் எந்த ஒரு பிரச்னை என்றாலும், உடனடியாக அது சமூகவலைத்தளங்களில் வந்துவிடும்.

பின்னர், அது டிரண்டாகிவிடும், அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று தமிழர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாகியுள்ளனர். முதல் இடத்தில் தமிழகத்தின் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார்.

இவர் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதற்கு அவர் நன்றி தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது மிகவும் வைரலானது.

சுந்தர் பிச்சையை தொடர்ந்து, திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்யானந்தா, வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றார்.

ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான இவர், சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்து அறிவித்தார். அது சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

மூன்றாவதாக, நிலவில் காணாமல் போன விக்ரம் லேண்டரை மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் இன்ஜினீயராக உள்ள சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்ததாக நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்