சில்லிடும் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு மாணவர்கள்: மருத்துவர் செயலால் உயிர் பெற்ற அற்புதம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
229Shares

டென்மார்க்கை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குளிர்ந்த நீரில் மூழ்கியும் தாங்கள் உயிர்பெற்றது குறித்து பகிர்ந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற இடத்தில், படகில் பயணம் மேற்கொண்டபோது அது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பேச்சு மூச்சற்று மருத்துவ அடிப்படையில் கூறினால், இதயம் நின்று, உயிரிழந்து போன அந்த ஏழு பேரும் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் விழுந்து ஆறு மணி நேரம் ஆகியிருந்தது.

என்றாலும், அவர்கள் குளிர்ந்த நீரில் விழுந்து உயிரிழந்தார்கள் என்ற செய்தி அறிந்ததும், சற்றும் பதறாத Dr Michael Jaegar Wansche என்பவர், அவர்களை 100 சதவிகிதம் மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியும் என்றார் நம்பிக்கையுடன்.

கொண்டு வரப்பட்டவர்களின் உடல் வெப்பநிலை 18 டிகிரிக்கும் கீழே சென்றிருந்தது. அவர்களது உடல்களை வெப்பப்படுத்தத் தொடங்கினார் மருத்துவர்.

அவர்கள் உடலில் உள்ள இரத்தத்தின் வெப்பநிலையை, 10 நிமிடங்களுக்கொருமுறை ஒரு டிகிரி உயர்த்தினர் மருத்துவர்கள்.

சரியாக 26 டிகிரி வந்ததும், அற்புதமாக ஏழு பேரின் இதயங்களும் துடிக்க ஆரம்பித்தன.

அதாவது அவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து ஆறு மணி நேரத்திற்குப்பின் அவர்கள் அனைவரும் உயிர் பெற்றனர்.

உண்மையில் இந்த சம்பவம் நடந்தது 2011ஆம் ஆண்டு. தற்போது அந்த விபத்தில் செத்துப்பிழைத்த அந்த மாணவர்கள், அப்போது நடந்ததை இப்போது நினைவுகூறும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

பலர் நீந்த இயலாமல் தண்ணீரில் மூழ்க, ஒரு மாணவி மட்டும் எப்படியோ கரைக்கு நீந்தி வந்துள்ளார்.

அப்போது தன்னை நோக்கி ஒருவர் வருவதைக்கண்டு உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார் அவர். ஆனால் அவருக்கு முன்பே ஒருவர் மீட்புக்குழுவினருக்கு தகவலளித்துவிட, அவர்கள் வந்துவிட்டார்கள்.

ஆனால், அவர்களால் இரண்டு மணி நேரத்திற்கு முன் உயிரிழந்த ஏழு பேரைத்தான் காண முடிந்திருக்கிறது.

அப்போதுதான் ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார் Dr Michael Jaegar Wansche. பின்னர் அவர் செய்த அற்புதம், இறந்து போனதாக கருதப்பட்ட அந்த ஏழு பேரும் இன்று வளர்ந்து வாலிபர்களாக நிற்கிறார்கள்.

Casper என்பவர் சுய நினைவின்றி கிடக்கும்போது, அதை அவரது தந்தை புகைப்படம் எடுத்துள்ளார்.

தான் இறந்து கிடப்பதை தானே பார்ப்பதற்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது என்கிறார் Casper.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்