சூடான் செராமிக் டைல்ஸ் நிவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 3தமிழர்கள் உள்ளிட்ட 23பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டின் தலைநகரான கார்த்தோமின் வடக்கு புறநகர் பகுதியாக பகரியில் சலோமி என்ற செரமிக் டைல்ஸ் நிறுவனத்தின் பெரிய டேங்கர் லொரியில் கொண்டுவரப்பட்ட எரிவாயு இறக்கும் போது எரிவாயு கசிந்து தீப்பற்றியது.
இந்த விபத்தில் 23பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 130 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இந்தியர்கள் 18பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அதில், 3பேர் தமிழர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள், கடலூர் மாவட்டம் மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மற்றொருவர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”தொழிற்சாலையில் 60 இந்தியர்கள் பணியில் இருந்தனர். விபத்து நடந்த பொழுது அவர்களில் 53 பேர் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது
விபத்து பற்றி மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. தொழிற்சாலையில் 60 இந்தியர்கள் பணியில் இருந்தனர். விபத்து நடந்த பொழுது அவர்களில் 53 பேர் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019
துரதிர்ஷ்டவசமாக, இந்தியப் பணியாளர்களின் மத்தியிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாங்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அறிய முயற்சிசெய்து வருகிறோம்.
காயமடைந்தவர்கள் அல்-அமால் மருத்துவமனை, ஒம்டுர்மான் டீச்சிங் மருத்துவமனை மற்றும் இப்ராஹிம் மாலிக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்”.
என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.