தொடர்ந்து அத்துமீறிய தந்தை... கொடூரமாக பழி தீர்த்த மகள்கள்: விசாரணையில் வெளிவந்த உண்மை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1471Shares

ரஷ்யாவில் சொந்த மகள்களையே பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய தந்தைக்கு மகள்கள் மூவர் மரண தண்டனை விதித்துள்ள சம்பவத்தில் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த தந்தையை தண்டிக்க பல நாட்கள் காத்திருந்த மூன்று மகள்களும், வய்ப்பு அமைந்தபோது 30 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.

குடம் போன்ற பொருளால் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். மேலும், காயங்களில் மிளகு ஸ்பிரே அடித்துள்ளனர்.

அந்த நபர் கொஞ்சம் கொஞ்சமாக சாவதை அவர்கள் மூவரும் அருகில் இருந்து பார்த்து ரசித்துள்ளனர். பின்னர் அவர் மரணமடைந்ததும், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மூவருக்கும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என நிரூபணமானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தலைநகர் மாஸ்க்கோவில் குடியிருக்கும் சகோதரிகளான க்ரெஸ்டினா(19), ஏஞ்சலினா(18) மற்றும் மரியா கச்சதுரியன்(17) ஆகிய மூவருமே சொந்த தந்தையை கொலை செய்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.

57 வயதான மிகைல் கச்சதுரியன் என்பவரே கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி சொந்த மகள்களால் கொல்லப்பட்டவர்.

விசாரணையை எதிர்கொள்ளும் இளம்பெண்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தேறும் நிலையிலும், தண்டனை வாங்கித் தருவதில் பொலிசார் உறுதியாக உள்ளனர்.

அவர்கள் கொலைகாரர்கள் அல்ல எனவும், தங்களுக்கு ஆண்டுகளாக ஏற்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலை பெற மேற்கொண்ட செயல் இது எனவும் ஆதரவாளர்களின் வாதம்.

குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை வெறும் குடும்ப பிரச்னை எனவே ரஷ்ய பொலிசார் கருதுகின்றனர்.

அங்கு இதற்கான சட்டங்கள் இல்லை. உடலளவிலும், மனதளவிலும் சித்திரவதைக்கு உள்ளாவதாக மிகைலின் மனைவி பொலிசாரை நாடியுள்ளார்.

ஆனால் அந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளனர். இந்த நிலையில் மிகைல் தமது மனைவியை குடியிருப்பில் இருந்து வெளியேற்றினார்.

இதனையடுத்து கடந்த 2014 முதல் தமது மூன்று மகள்களுக்கும் மிகைல் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

வெளி உலகுடன் எந்த தொடர்பும் கூடாது எனவும், சின்னதாய் தவறு நேர்ந்தாலும், கடுமையான தண்டனை வழங்கி வந்துள்ளார் மிகைல்.

சம்பவத்தன்றும் தமது மகள்களை மிகைல் துன்புறுத்தியுள்ளார். பின்னர் தமது அறைக்கு சென்று அவர் தூங்கியுள்ளார்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திய மூவரும் தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்