இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா தற்போது, தான் வாங்கியிருக்கும் புதிய தீவிற்கு கைலாசம் என்று பெயர் வைத்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.
ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்கு சென்ற போது, அங்கு மகள்களை பார்க்க அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் இருந்து தப்பி தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை நித்தியானந்தா விலைக்கு வாங்கியதாக கூறப்பட்டது.
தற்போது அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கென்று தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்ற போது, இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறப்படுகிறது. மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.
அதே சமயம் நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் தற்போது 300 ஆசிரமங்கள் இருக்கின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவர் வசம் இருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் அவரின் சொத்து பலமடங்கு பெருகியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
நித்தியானந்தாவின் பக்தர்கள், உலகம் முழுவதும் வசிக்கிறார்கள். வசதிபடைத்த பலர், ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பார்கள்.
அவர்களைச் சந்திக்கும் நித்தியானந்தாவின் பக்தர்கள், சுவாமிஜியைச் சந்தித்துவாருங்கள். உங்கள் பிரச்னைகள் நொடியில் விலகிவிடும் என்று கூற, அப்படி அவர்கள் நித்தியானந்தாவை சந்திக்கும் போது, தான் நித்தியானந்தா அவர்களிடம் பிரச்சனை சரியாக பரிகாரம் என்ற பெயரில், கோயில் கட்டினால் சரியாகும், கோசாலை அமையுங்கள், தங்கத் தேர் செய்து ஆசிரமத்துக்கு அளியுங்கள் என்று கூறுவாராம்.
அதை அவர்கள் நேரடியாக செய்ய முடியாதாம், ஆசிரமத்திடம் தொகையைத் தந்துவிட அவர்கள் செய்வார்கள் என்று கூறிவிடுவார்களாம். இப்படி பலரிடம் இடமாகவும், தொகையாகவும், தங்க நகைகளாகவும் பெற்றதே பல நூறு கோடி ரூபாய் வரும் என்று கூறுகின்றனர். ஆனால் பரிகாரம் என்ற ஒன்றே அப்படி செய்ததில்லை என்று பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் புலம்பி வருகின்றனர்.