உயிரைக் கொடுத்து தந்தையை காப்பாற்றிய 3 வயது சிறுவன்: முதன் முறையாக வெளியான புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
216Shares

உக்ரைன் நாட்டில் அரசியல்வாதி மீது நடந்த கொலை முயற்சியில் சிக்கி கொடூரமாக கொல்லப்பட்ட அவரது 3 வயது மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 3 வயதேயான சாஷா சோபெலெவ் என்ற சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து சம்பவயிடத்தில் மரணமடைந்தான்.

சிறுவனின் தாயார் 33 வயதான இன்னா சோபொலெவா தமது சமூக வலைதள பக்கத்தில், அரக்கர்களால் இன்று எனது குட்டி தேவதை கொல்லப்பட்டான் என பதிவிட்டுள்ளார்.

அரசியல்வாதியான 47 வயது Vyacheslav Sobelev என்பவரே கொலைகாரர்களின் முக்கிய இலக்காக இருந்துள்ளது.

சம்பவம் நடக்கும்போது சிறுவன் சாஷா Vyacheslav Sobelev-ன் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்துள்ளான்.

இந்த தாக்குதலில் Vyacheslav Sobelev காயமின்றி தப்பியதுடன், உடனடியாக வாகனத்தில் இருந்து வெளியேறி, உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த உணவு விடுதியும் இவர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் உக்ரேனிய சார்பு பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இருவர் மீதும் கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்