8 வயது மகளுக்காக மரண தண்டனை பெறும் தந்தை: அவருக்கு மன்னிப்பே இல்லை என பொதுமக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் மகளை கிண்டல் செய்த சம வயது சிறுவனை பாடசாலை புகுந்து கொடூரமாக கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் குடியிருக்கும் வாங் என்பவரே தமது மகளை கிண்டலடித்ததாக கூறி 9 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்தவர்.

கடந்த மே மாதம் நடந்த இச்சம்பவத்தில், விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இன்று அவருக்கு ஜியாங்சி மாகாண நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

குறித்த 9 வயது சிறுவனை பாடசாலைக்குள் புகுந்து இறைச்சி வெட்டும் கத்தியால் ஆத்திரம் அடங்கும் மட்டும் கொடூரமாக தாக்கியுள்ளார் வாங்.

மட்டுமின்றி குற்றுயிராக கிடந்த சிறுவனை அள்ளியெடுத்து, தரையில் வீசி தமது ஆத்திரத்தை அவர் தீர்த்துள்ளார்.

குறித்த சிறுவன் வாங்கின் மகளை கிண்டலடித்த விவகாரத்தில், பாடசாலையில் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே வாங், மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் கொட்டுர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாரிடம் வாங் சரணடைந்துள்ளார்.

மகளுக்காக வாங் மேற்கொண்ட செயல் மிகவும் கொடூரம் எனவும், இது மன்னிக்க முடியாத செயல் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்