94 வயது மூதாட்டியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட பெண்கள்! ரகசிய கமெராவில் கண்ட காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நார்வேயில் 94 வயது மூதாட்டியை கவனித்து கொள்ள பெண்களை வேலைக்கு குடும்பத்தினர் அமர்ந்தியிருந்த நிலையில், அவர்கள் அந்த மூதாட்டியை அடித்து துன்புறுத்தியது ரகசிய கமெரா மூலம் தெரியவந்துள்ளது.

நார்வேயின் Brent-ல் இருக்கும் Meera House-ல் Paniben Shah(94) குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Dementia என்ற நோயால் பாதிப்புக்குள்ளான Paniben Shah-வை பார்த்து கொள்வதற்காக அவரின் மகன் Kirti இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

அவருக்கு உடை மாற்றி விடுவது, சாப்பாடு கொடுப்பது மற்றும் தேவையான உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரின் அறையில் மகன் மற்றும் பேரன் இருவரும் இவர்களின் நடவடிக்கையை கவனிக்க ரகசிய கமெரா ஒன்றை பொருத்தியதாக கூறப்படுகிறது.

அப்போதுதான் பணியில் அமர்த்தப்பட்ட இருவரும் Paniben Shah-விடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நடைபெற்ற விசாரனையில் நீதிமன்றம் மூன்று பேருக்கும் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதில் Anita Kc Thapa(46) என்ற பெண்ணுக்கு 6 மாதமும், Anita Bc(49) என்பவருக்கு ஐந்து மாதமும், Heena Parekh(55) என்பவருக்கு நான்கு மாதமும் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று பேரும் Wembley-ஐ சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்