பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டரை மோத வைத்து 13 வீரர்களை கொன்றது நாங்கள் தான்.. சதி வேலையை விளக்கிய அறிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

மேற்கு ஆப்பரிக்கா நாடான மாலியில் இரண்டு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதற்கு தாங்கள் தான் காரணம் என ஐ.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 25ம் திகதி இரண்டு பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் தெற்கு மாலியில் ஜிகாதிகளுக்கு எதிராக இரவு நேரத்தில் நடந்த சண்டையின் போது மோதிக்கொண்டன. இதில், 13 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் ராணுவத்தின் கூற்றுப்படி, சஹாராவில் ஐ.எஸ் உட்பட ஆயுதமேந்திய குழுக்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரான்ஸ் ஜிகாதி எதிர்ப்பு படைக்கு ஆதரவாக ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டன என தெரிவித்தது.

ஐ.எஸ்-ன் வழக்கமான டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மேனகா பகுதியில் உள்ள பிரான்ஸ் படைகள் இருந்து இடத்தில் பதுங்கியிருந்த போது மோதல்கள் வெடித்ததாக கூறியுள்ளது.

பிரான்ஸ் தரைப்படைகளுக்கு உதவுவதற்காக வந்த ஹெலிகாப்டர், நாங்கள் பதுங்கியிருந்த இடத்தில் தரையிறங்க முயன்றது.

ஆனால், ஐ.எஸ் வீரர்கள் ஹெலிகாப்டரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதை பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினர், இதன் போது அது மற்றொரு ஹெலிகாப்டருடன் மோதியதில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.எஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்