189 நாளில் 14 சிகரங்கள் ஏறி சாதனை: சாகச நாயகனுக்கு குவியும் பாராட்டு மழை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரித்தானிய ராணுவத்தில் பயிற்சி பெற்ற நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலகின் 14 முக்கிய சிகரங்களை வெறும் 189 நாட்களில் ஏறி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

நேபாளத்தின் Myagdi பகுதியை சேர்ந்த 36 வயதான நிர்மல் புஜ்ரா என்ற இந்த சாகச நாயகனுக்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமது சாகச பயணத்தை தொடங்கியுள்ளார் நிர்மல் புஜ்ரா. பயண செலவுக்காக தனது சொந்த வீட்டையும் விற்றுள்ளார்.

ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நேபாளில் உள்ள மவுண்ட் அன்பூர்ணாவையும், மே 12 ஆம் திகதி மவுண்ட் தவுலகிரியையும், மே 15 ஆம் திகதி மவுண்ட் காஞ்சன்ஜங்காவையும், மவுண்ட் எவெரெஸ்டை மே 22 ஆம் திகதியும் ஏறி அசத்தியுள்ளார்.

தொடர்ந்து மவுண்ட் லோட்சேவை மே 22 ஆம் திகதி, மே 24 ஆம் திகதி மவுண்ட் மக்காலுவையும், செப்டம்பர் 27 ஆம் திகதி மவுண்ட் மனஸ்லுவிலும் ஏறியுள்ளார்.

இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள மவுண்ட் நங்கா பர்பத், மவுண்ட் காஷர்பிரம் 1, மவுண்ட் காஷர்பிரம் 2 உள்ளிட்ட சிகரங்களிலும் ஏறியுள்ளார்.

பின்னர் மவுண்ட் கே2, மவுண்ட் பிராட் பீக் உள்ளிட்ட சிகரங்களிலும் நிர்மல் ஏறியுள்ளார். சீனாவில் உள்ள மவுண்ட் சோ யூவில் ஏறிய நிலையில் மவுண்ட் ஷிஷாபங்மாவை ஏற சீனா அரசாங்கம் அனுமதி அளிக்காத நிலையில் நிர்மல் நேபாள அரசின் உதவியை நாடியுள்ளார்.

இதனையடுத்து நேபாள அரசு சீனா அதிகாரிகளுடன் பேசி அனுமதி வாங்கி தந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் திகதி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவருக்கு முன்பாக தென்கொரியாவை சேர்ந்த கிம் சாங் 14 சிகரங்களை 7 வருடங்கள் ,10 மாதங்கள் மற்றும் 6 நாட்களில் எறியதே சாதனையாக இருந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்