விமான நிலையத்தில் கட்டுக் கட்டாக கண்டெடுத்த பணம்: பெண் ஊழியரின் செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் விமான நிலைய ஊழியர் ஒருவர் அங்குள்ள உணவகத்தில் கண்டெடுத்த கத்தையான பணப்பையை உரிமையாளரிடம் திருப்பி அளித்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள நினாய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார் Emiline Herrera என்ற பெண்மணி.

இவரது மாத ஊதியம் வெறும் 354 டொலர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று முனையம் ஒன்றில் இவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள உணவம் ஒன்றில் கேட்பாரற்று கடித உறை ஒன்று இருந்துள்ளது. முதலில் குப்பை என கருதிய அவர், அதன் உள்ளே என்ன இருக்கிறது என பரிசோதித்துள்ளார்.

அந்த உறையில் சுமார் 4,700 டொலர் பணம் இருந்ததை பார்த்து அவர் அதிர்ந்து போயுள்ளார். மிக துச்சமான மாத ஊதியம் பெறும் எமிலின் வேறொன்றும் யோசிக்கவே இல்லை,

உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார் அவர். கடந்த 30 ஆண்டுகளாக விமான நிலைய ஊழியராக பணியாற்றிவரும் அவர்,

கண்டெடுத்த பணம் தமக்கு உரியது அல்லது, தவறவிட்டவருக்கு அதற்கான தேவைகள் இருக்கும் என எண்ணியுள்ளார்.

இதனிடையே பணத்தை தவறவிட்ட நபர் விமான நிலைய பொலிசாரிடம் புகார் அளித்து, அவர்கள் வழியாக குறித்த பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விமான நிலைய உயர் அதிகாரிகள் எமிலினின் நேர்மையை பாராட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்